தமிழ்க்குடிமகனுக்கு தி.மு.க. வில் சீட் இல்லை
சென்னை:
இந்து அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு தேர்தலில் தி.மு. க. வில் சீட் கிடைக்காது என்றுகூறப்படுகிறது.
அதற்குப் பதிலாக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி வழங்கப்படலாம் என்றும்தெரிகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையாங்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்தமிழ்க்குடிமகன். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர். தற்போதைய ஆட்சியில்அமைச்சராக இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த, முன்னாள் பேராசிரியர்.
தற்போது மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தமிழ்க்குடிமகனுக்கு சீட் கிடைக்குமா என்றகேள்வி எழுந்துள்ளது. அவரகுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதில்லை எனவும், அவரது தொகுதியானஇளையாங்குடியை மக்கள் தமிழ் தேசம் தலைவர் கண்ணப்பனுக்குக் கொடுக்கவும் தி.மு.க. தலைமைதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தனக்கு சீட் மறுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்ட தமிழ்க்குடிமகன் வியாழக்கிழமை அவசரம், அவசரமாகஇளையாங்குடிக்குக் கிளம்பிச் சென்றார். அங்குள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தனியாக நின்று போட்டியிடுமாறும், அதிக ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்று அவரதுஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், உடனடியாக கிளம்பி சென்னைக்கு வருமாறு தமிழ்க்குடிமகனுக்குதகவல் வந்தது.
இதையடுத்து தனது ஆதரவாளர்கள் புடை சூழ சென்னை கிளம்பிச் சென்றார் தமிழ்க்குடிமகன். அங்கு கட்சித்தலைமை சார்பில் பேசியவர்கள், அமைச்சர் பதவிக்கு இணையான பதவி தரப்படும் என்று சமாதானம்கூறப்பட்டது. இதை அவர் ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை.
இதற்கிடையே, தமிழ்க்குடிமகனுக்கு மீண்டும் இளையாங்குடியே தர வேண்டும் என்று கோரி அவரதுஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்கு நூற்றுக்கணக்கான தந்திகளை அனுப்பினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications