வைகோ வெளியே போகலாம்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
தி.மு.க. கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று ம.தி.மு.க. நினைத்தால் அவர்கள் தாராளமாகவெளியேறலாம் என்று முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை கூறினார்.
இதுகுறித்து சென்னையில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ம.தி.மு.க, தி.மு.க கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று தீர்மானித்தால் அவர்கள் வெளியேறலாம்.ம.தி.மு.க. வுக்கு 21 தொகுதிகள் கொடுத்துள்ளோம். இதற்கு மேல் கொடுக்க முடியாது.
நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டோம் என்று அவர்கள் பொய் கூறி வருகிறார்கள்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 21 தொகுதிகளை தி.மு.ககொடுத்துள்ளது. அதில் 12 தொகுதிகள் மட்டும் தான் நாங்கள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த தொகுதிகள் என்றுகூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 43 தொகுதிகள் தேவை என்று ம.தி.மு.கவினர் பட்டியல் கொடுத்தார்கள்.அவர்கள் கொடுத்த 43 தொகுதிகளிலிருந்துதான் நாங்கள் 21 தொகுதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குஒதுக்கினோம் என்றார் கருணாநிதி.
ஏற்கனவே, தி.மு.க.வோடு தொகுதிப் பங்கீடு குறித்து மோதி வரும் வைகோவின் மதிமுக கருணாநிதியின்அறிவிப்பால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இரு கட்சிகளுக்கும் சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் ஆரம்பித்த தகராறு தொகுதிகளைஒதுக்குவதிலும் தொடர்ந்தது. இப்போது பிரச்சனை முற்றி வருகிறது.
உதவாத தொகுதிகளை எங்கள் தலையில் கட்டுவதா என்று ம.தி.மு.க.தொண்டர்கள் கருணாநிதியை கண்டித்துஇரண்டு தினங்களுக்கு முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரஸ், காமாட்சி நாயுடுதலைமையிலான தெலுங்கர் முன்னேற்றக் கழகம், சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியகட்சிகள் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டன என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications