தமிழகத்தில் மே 10ம் தேதி தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய நான்குமாநிலங்களிலும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.

அசாம் தவிர அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீதம் மின்னணு வாக்குப் பதிவுஎந்திரங்களைக் கொண்டு தான் ஓட்டுப் பதிவு நடக்கும்.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையின் காலம் இந்த ஆண்டு மே மாதம்21ம் தேதியுடன் முடிவடைகிறது.

140 உறுப்பினரைக் கொண்ட கேரள சட்டசபையின் காலம் இந்த ஆண்டு மே மாதம்28ம் தேதி முடிவடைகிறது.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்காள சட்டசபையின் காலமும், 30உறுப்பினர்களைக் கொண்ட பாண்டிச்சேரி சட்டடபையின் காலமும் இந்த ஆண்டு ஜுன்மாதம் 11ம் தேதி முடிவடைகிறது.

தமைைை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லின் தலைமையில் தேர்தல் குழு நான்குமாநில தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் குறித்து விவாதிக்க சனிக்கிழமை பிற்பகல்கூடியது.

இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தேர்தல் ஆணையர்எம்.எஸ்.கில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,தமிழ்நாடு,பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய நான்குமாநிலங்களிலும் ஒரே நாளில், மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.

தேர்தலுக்கான அட்டவணை ஏப்ரல் மாதம் 16ம் தேதி அறிவிக்கப்படும். வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 23ம் தேதி.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் மாதம்24ம் தேதி நடைபெறும். வேட்பு மனுவ திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் 26ம் தேதியாகும்.

மே 10ம் தேதி தேர்தல் முடிந்த பின் வாக்குகளை எண்ணும் பணி மே மாதம் 13ம் தேதிதொடங்கும்.

அசாம் தவி, அனைத்து மாநிலங்களிலும் எல்லா தொகுதிகளிலும் மின்னணுவாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, உத்திரபிரதேசத்திலுள்ள ஷஜாபூர் நாடாளுமன்றதொகுதி, மேற்கு வங்காளத்திலுள்ள மிட்னாபூர் நாடாளுமன்ற தேர்தலும் மே மாதம்10ம் தேதி நடைபெறும்.

தேர்தலுக்கான விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றனஎன்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+