மகளின் காதலனை தாக்கி மொட்டையடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றப்பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

தனது மகளைக் காதலித்த வாலிபரை மொட்டையடித்து, வீட்டிலேயே கட்டிப் போட்டு கொடுமைப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகலைவாணன் மீது போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசின் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் ஆணையராக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைவாணன். இவரதுசொந்த ஊர் சிவகங்கை அருகில் உள்ள குருந்தங்குளம்.

இவரது உறவினர் முருகன் (வயது 24). தனது மகள் மேனகாவுக்கு டிரைவிங் சொல்லித் தருமாறு முருகனை கலைவாணன்கேட்டுக் கொண்டார். முருகனும் மேனகாவுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்தார்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதை அறிந்த கலைவாணன் ஏழையான முருகனை தனது மகள் காதலிப்பதா என்றுஅதிர்ச்சியடைந்தார். முருகனை கூப்பிட்டு டிரைவிங் சொல்லிக் கொடுத்தது போதும். இனி என் வீட்டுப் பக்கம் வரும் வேலைவைத்துக் கொள்ளாதே. எனது மகள் மேனகாவை நீ சந்தித்தால் தொலைத்துவிடுவேன் என எச்சரித்து அனுப்பினார்.

ஆனால், இவர்களின் காதல் தொடர்ந்தது. இதையடுத்து முருகனைக் கொன்றுவிட கலைவாணன் திட்டமிட்டார். தனது பதவிபலத்தையும், ஊரில் இருக்கும் தனது உறவினர்களையும் பயன்படுத்தி முருகனை கொல்ல முயற்சித்தார்.

இதையடுத்து முருகனை அடித்து, ரத்தம் சொட்ட சொட்ட ரயிலில் குருந்தங்குளத்துக்கு கொன்று சென்றார் கலைவாணன்.அவருக்கு மொட்டையும் அடித்தனர் கலைவாணனின் உறவினர்கள். இவரை கிறுக்கன் என்று கூறி மனநல காப்பகத்தில்சேர்த்துவிட்டனர். கலைவாணனின் இந்தக் கொடுமைக்கு அப்போது சிவகங்கை மாவட்ட மறுவாழ்வுத்துறை அலுவலராக இருந்தராமகிருஷ்ணனும் உதவினார்.

பெரிய கும்பலே சேர்ந்து தன்னைத் தாக்கி மன நல காப்பகத்தில் சேர்த்துவிட்டதை முருகனால் எதிர்க்கக் கூட முடியவில்லை. அந்தஅளவுக்கு அவருக்கு அடி உதை விழுந்து சோர்ந்து போயிருந்தார்.

ஒரு வழியாய் முருகனின் பெற்றோர் கலைவாணனின் மிரட்டலையும் மீறி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்துத் தான் இந்தவிவரம் வெளியே தெரிய வந்தது.

இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கலைவாணனின் இந்தச் செயல் குறித்து முழு விசாரணைநடந்தது. அதில் அதிகாரி கலைவாணனின் தூண்டுதலின்பேரில் 9 பேர் இந்த கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த 9 பேர் மீதும் மானாமதுரை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனைஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கலைவாணன் மீது ஆசிரியை ஒருவரை கற்பழித்த குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+