அதிமுக-த.மா.கா. கூட்டணியிலும் சண்டை
சென்னை:
திமுக-மதிமுக பிரச்சனையைப் போலவே அதிமுக-த.மா.கா. கூட்டணியிலும் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் த.மா.கா.-காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தம் 47 இடங்களை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.இதில் 32 இடங்களில் த.மா.காவும், 15 இடங்களில் காங்கிரசும் போட்டியிட உள்ளன.
த.மா.காவில் இப்போதே 36 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 36 இடங்களையும் த.மா.கா-காங்கிரசுக்கு ஒதுக்கவேண்டும் என மூப்பனார் ஜெயலலிதாவிடம் கேட்டு வருகிறார். இது தவிர மற்ற 11 இடங்களையும் ஜெயலலிதாமூப்பனாருக்கு தந்தாக வேண்டும்.
ஆனால், ஏற்கனவே த.மா.கா. வென்ற இடங்களை மீண்டும் அந்தக் கட்சிக்குத் தர ஜெயலலிதா தயாராக இல்லை.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தனக்கு பலம் அதிகம் உள்ளதாகக் கருதும் ஜெயலலிதா, இந்தமாவட்டங்களில் கடந்த தேர்தலில் த.மா.கா. வென்ற இடங்களில் இம் முறை அதிமுக வேட்பாளர்களை நிறுத்தமுடிவு செய்துள்ளார்.
வெறும் 141 இடங்களில் மட்டுமே போட்டியிடுவதால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளைவிட்டுத் தர ஜெயலலிதா தயாராக இல்லை. இதனால், மூப்பனார்- ஜெயலலிதா இடையே மீண்டும் மனக் கசப்புஏற்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எடுத்துக் கொண்டு எதிர் கூட்டணிக்கு பலம் உள்ள தொகுதிகளில் தங்களைநிற்க வைத்து தங்களை பலி கடா ஆக்க ஜெயலலிதா முயல்வதாக த.மா.கா.-காங்கிரஸ் கட்சிகள் நினைக்கின்றன.












Click it and Unblock the Notifications