ம.தி.மு.கவை உடைக்க திமுக திட்டம்: முக்கிய புள்ளிகளுக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்தால் அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர மதிமுக முன்னணிபிரமுகர்கள் சிலர் தயாராக உள்ளனர். இவர்களை சேர்த்துக் கொள்ள திமுகவும் தயார் என சிக்னல் காட்டிவிட்டது.

மதிமுகவை உடைத்து தன்னை பலவீனப்படுத்த முயற்சி நடப்பதால் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளார்.

திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவை வெளியேற்ற திமுகதயாராகி விட்டது. அவர்கள் விரும்பினால், தேர்தலில் தனித்துப் போட்டியிடட்டும் என்று கூறி விட்டார்கருணாநிதி. அடுத்த கட்ட முடிவு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் இன்று (சனிக்கிழமை) மாலை அறிவிக்கஉள்ளார்.

இந் நிலையில், ஒருவேளை மதிமுக தனித்துப் போட்டியிடவோ அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிடவோ முடிவு செய்தால், கட்சியை பலவீனப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திமுகதரப்பு திட்டம் தீட்டியிருப்பதாகப் பேசப்படுகிறது.

மதிமுக தரப்பில் சிலரை திமுகவுக்கு இழுப்பதன் மூலம் மதிமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று திமுகநினைக்கிறது. இதன் மூலம் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், தங்களுக்கு எதிராக பெரிய அளவில் மதிமுககிளம்பி விடாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது திமுக.

மதிமுக தரப்பிலிருந்து திமுகவுக்குத் தாவ மதிமுகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான கலைப்புலி தாணுதயாராக இருப்பதாகத் தெரிகிறது. திமுகவிலிருந்து விலகி வந்த வைகோவுக்கு தாணு தனது சொந்தக் கட்டிடத்தைக்கொடுத்து கட்சி அலுவலகம் நடத்த அனுமதித்தவர்.

கட்சிக்காக பெரும் தொகையை செலவழித்தவர்களில் முக்கியமானவர் கலைப்புலி தாணு.

இதேபோல, தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனும்திமுகவுக்குத் தாவ தயார் என்று கூறப்படுகிறது. இதேபோல, வட சென்னை மாவட்ட மதிமுக செயலாளர்மனோகரனும் திமுகவுக்கு மாற தயாராக உள்ளார். இவர் கருணாநிதியை குள்ளநரி கருணாநிதி என்று விமர்சித்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு எதிராக மதிமுக கிளம்பி விடாமல் தடுக்க அக்கட்சியை உடைப்பதே நல்லது என்ற முடிவில் திமுகஉள்ளது. இதற்கு ஸ்டாலின் முழு ஆதரவு உள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+