பஞ்சாயத்து தலைவி கொலை: 5 பேர் கோர்ட்டில் சரண்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவியை கொலை செய்த திமுகவை சேர்ந்த 5 பேர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை புறநகர்ப்பகுதியில் உள்ள ஊரப்பாக்கம் பஞ்சாயத்தின் தலைவியாக இருந்த மேனகா திமுக உறுப்பினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர்(ரிசர்வ்) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

இதனை பொறுக்காத திமுக கோஷ்டி ஒன்று பட்டப்பகலில் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து அவரை வெட்டி கொன்றது.

திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இவர்களை தேட காஞ்சிபுரம் போலீசார் 4 தனிப்போலீஸ் படைகளை அமைத்து இருந்தனர்.

அதற்குள் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேரும்

சோழிங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை 15 நாளில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் வேலூர்சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மார்க்ஸிஸ்ட் கண்டனம்: மேனகாவின் கொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சங்கரய்யா கண்டணம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த கொலையை கண்டித்துள்ள அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களை அதிலும்தலித் உறுப்பினர்களை செயல்பட விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன.

இந்த கொலையை செய்தவர்கள் திமுக உறுப்பினர்கள். எனவே, அரசு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி உள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+