ஒரு நாள் தொடரை கைப்பற்றுவோம்: கங்குலி
விசாகப்பட்டினம்(ஆந்திரப்பிரதேசம்):
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வெல்வதே இந்திய அணியின் தற்போதைய நோக்கம். எனவே, செவ்வாய்க்கிழமைநடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் செளரவ் கங்குலிநம்பிக்கை வெளியிட்டார்.
விசாகப்பட்டினத்தில் நிருபர்களை சந்தித்த போது இக்கருத்தை வெளியிட்ட கங்குலி, செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியின் போது, ஹெட் அல்லது டெயில்தெளிவாக இருக்கும் நாணயத்தை டாஸ் போட பயன்படுத்துமாறு போட்டி நடுவரான கேமி ஸ்மித்திடம் கோரியுள்ளேன்.
ஏனெனில், இந்தூர் போட்டியில் டாஸ் போட பயன்படுத்திய நாணயத்தில் அசோக சக்கரமும், ரூபாய் மதிப்பும் ஒரே பக்கம் இருந்ததால், எந்த பக்கம் தலைஎந்த பக்கம் பூ ( ஹெட் அல்லது டெயில்) என தெரியவில்லை என்றார்.
ஷார்ஜா உள்ளிட்ட போட்டிகளுக்கு இந்திய அணி செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது குறித்து கேட்கப்பட்டதற்கு கங்குலி பதில் அளிக்கமறுத்துவிட்டார்.
ஆனால், அணியின் மேலாளரான சேடன் செளகான் இது பற்றி கூறும் போது, மத்திய அரசின் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்றார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் தனது பேட்டியில், ஜிம்பாப்வே, இலங்கை, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முன் இந்திய அணிக்கு ஒரு மாதம்ஓய்வு கொடுக்கலாம்.
ஆனால், அதைவிட முக்கியமாக ஜிம்பாப்வே டூருக்கு அணி வீரர்களை தயார்படுத்த பயிற்சி முகாம் நடத்த வேண்டியுள்ளது.
இந்திய அணியில் அனைவரும் நல்ல முறையில் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்திய அணியினர் தங்களது முழுத்திறனையும் பயன்படுத்தி ஆடினால் இந்திய அணி தான்பங்கேற்கும் அனைத்து தொடர்களையும் கைப்பற்றும் என்றார் ஜான் ரைட்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications