முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்
சென்னை:
எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன், சென்னை புறநகரில் உள்ளஆலந்தூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் எல்லாக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. புதிய நீதிக் கட்சி கடைசிநேரத்தில் சேர்ந்தால் அந்தக் கட்சிக்கு ஏதாவது தொகுதிகள் ஒதுக்கப்படலாம். கடைசியாக ஞாயிற்றுக்கிழமைஎம்.ஜி.ஆர். அதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், முக்கிய தலைகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இப்போது அரசியல் வட்டாரத்தில்முனுமுனுக்கப்பட்டு வருகிறது. அவர்களில் முக்கியத் தலைகள் குறித்து பார்க்கலாம்.
திருவொற்றியூர் தொகுதியில் தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் போட்டியிடுவார். அக்கட்சிக்குஇத்தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கையில் நின்று பழக்கப்பட்ட அவர் தற்போது நிற்கப் போவதுஉதயசூரியன் சின்னத்தில்.
மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன், இளையாங்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.இத்தொகுதியை கண்ணப்பன் கட்சிக்கு கொடுத்த காரணத்தால்தான் அதிருப்தியுற்று "அம்மாவிடம் சரண்அடைந்துள்ளார், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்க்குடிமகன். இந்த முறையும் இங்குஉதயசூரியன் சின்னத்தில் தான் நிற்கப் போகிறது.
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கட்சிக்கு ஆலந்தூர், நாட்றாம்பள்ளி ஆகிய தொகுதிகள்கொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஆலந்தூரில் ஆர்.எம்.வீ. நிற்பார் என்று தெரிகிறது. நாட்றாம்பள்ளி குறித்துமுடிவாகவில்லை.
தமிழர் பூமி கட்சித் தலைவர் கு.ப.கிருஷ்ணன், நத்தம் தொகுதியில் போட்டியிடுவார். இக்கட்சி நத்தம் தொகுதியில்மட்டும் போட்டியிடுகிறது. புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் மீண்டும்போட்டியிடுவேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
மற்றொரு தலித் தலைவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மங்களூர் தொகுதியில்போட்டியிடலாம் என்று தெரிகிறது.
வாணியம்பாடியில் தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் கட்சித் தலைவர் ஜே.எம்.ஆரூண் போட்டியிடுவார் என்றுதெரிகிறது. இவர் தற்போது வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருக்கிறார். இவரது கட்சிக்கு வாணியம்பாடி,பெரியகுளம், கடையநல்லூர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications