அமைச்சர் செங்குட்டுவனுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை:
தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த தமிழ்குடிமனின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் வகித்து வந்த பதவிகள் வேறு இரு அமைச்சர்களுக்கு கூடுதல்பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழி தமிழ்பண்பாட்டு துறை அமைச்சராக இருந்து வந்தவர் தமிழ்குடி மகன். இவர் கடந்தசட்டமன்ற தேர்தலில் இளையான்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றவர்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் இளையான்குடி தொகுதி கூட்ணி கட்சிகளில்ஒன்றான தமிழ்தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்குடிமகன் தி.மு.க. அமைச்சர் பதவி, தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவிஆகியவற்றை ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில்இணைந்தார்.
இவரது ராஜினாவை தமிழக ஆளுனர்பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்துதமிழ் குடிமகன் வகித்து வந்த தமிழ் ஆட்சிமொழி தமிழ் பண்பாட்டு துறை, அமைச்சர்தா.கிருட்டிணனிடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் வகித்துவரும் நெடுஞ்சாலைத்துறையுடன் இதையும் கூடுதல்பொறுப்பாக அவர் கவனிப்பார்.
இந்து அறநிலையத்துறை புலவர் செங்குட்டுவனுக்கு கூடுதல் பொறுப்பாககொடுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது கவனித்து வரும் கால்நடை பராமரிப்பு துறைபொறுப்புடன் இதையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
இது குறித்த உத்தரவை ஆளுனர் பாத்திமா பீவி பிறப்பித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications