கல்யாணம் பண்ணிக்கோங்க வாஜ்பாய் ...கவிஞர் யோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரம்மச்சாரி வாழ்க்கையே போதும் என நிம்மதியுடன் இருக்கும் பிரதமர் வாஜ்பாய் கல்யாணம் செய்திருந்தால்தற்போதைய பிரச்சனைகளில் இருந்து தப்பியிருக்கலாம் என சுரேந்திர சர்மா என்ற கவிஞர் கூறியுள்ளார்.
டெல்லியில், பிரதமர் வாஜ்பாய் கலந்துகொண்ட குஜராத் பூகம்ப நிவாரணநிதி திரட்டுவதற்கான நிகழச்சியில் பேசியஅந்த கவிஞர்,
அரசியலில் பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் வாஜ்பாய் திருமணம் செய்து கொண்டிருந்தால் இந்த நிலைஏற்பட்டு இருக்காது என்றார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர், இக்கருத்து ஒரு மண வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கவிஞரிடம் இருந்தவந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ மட்டும் அல்ல, இறந்த பின்னர் கூட நம்மை தூக்கிப் போட ஆட்கள்வேண்டும். துணையில்லாமல் முடியாது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications