டி.வி.- பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய, கட்-அவுட் வைக்க கட்சிகளுக்கு தடை
சென்னை:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அமைச்சர்கள் யாரும் இனி மாவட்டகலெக்டர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தும் வகையில் ஆய்வுக் கூட்டங்கள் எதையும்நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகள் மற்றும் நன்னடத்தை விதிகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி மிருதுஞ்சய் சாரங்கிநிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம்விதிமுறைகளை விதித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட அதிகாரிகள் மற்றும்மாவட்டக் கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் எதுவும் நடத்தக் கூடாது.
தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அமைச்சர்கள்,வேட்பாளர்கள் அனைவரும் தனித்தனியாகக் கண்காணிக்கப்படுவார்கள்.
அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களைத் தேர்தல் வேலைகளுக்காகவோ, கட்சி கூட்டங்களுக்காகவோபயன்படுத்தக் கூடாது. அரசு விமானங்களையும் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் செய்யப்படும் பிரசாரங்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. சாட்டிலைட் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் தேர்தல் விளம்பரங்கள் செய்யக் கூடாது.
வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆளுயர கட் அவுட்டுக்கள்,அலங்கார வளைவுகள் ஆகியவற்றை வைக்கக் கூடாது.
வேட்புமனுத் தாக்கல் செய்யப் போகும் போது, நீண்ட ஊர்வலத்துடன் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்திற்குச்செல்லக் கூடாது.
செய்தித்தாள்கள் மூலம் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் செய்யக் கூடாது.
புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், வேறு அடையாளங்களைக் காட்டி ஓட்டளிப்பதற்கு இதுவரைஎங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வரவில்லை.
வன்முறை, அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் ஏற்படாதவாறு தேர்தல் அமைதியாக நடப்பதற்காக மத்தியஅரசிடம் 125 கம்பெனிகள் மத்திய புறக்காவல் படை போலீசாரை நியமிக்குமாறு கேட்டுள்ளோம் என்றார் சாரங்கி.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
