தமிழர்களுக்கு உணவு, மருந்து: அரசு - புலிகள் ஒப்பந்தம்
கொழும்பு:
இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில், புலிகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கஇலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், மனித நேயஅடிப்படையில்தான் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனையாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புலிகளுடன்செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி எந்த நேரத்திலும், வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை இலங்கை அரசு அனுப்பி வைக்கும்.
வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை புலிகளேஎடுத்துக் கொண்டனர். அதே நிலைமை இப்போது மீண்டும் வரக் கூடாது. புலிகள் கட்டுப்பாட்டில் வாழும்தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுப்பும் உணவுப் பொருட்கள் அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றுபத்தரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மார்ச் மாதம் 24 ம் தேதியிலிருந்து சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டித்த புலிகள்கூறுகையில், இந்த முறை எங்கள் சண்டை நிறுத்தத்திற்கு அரசு பதில் கூற வேண்டும். இல்லாவிடில் தலைநகர்கொழும்பு உள்பட சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடும் தாக்குதல்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தனர்.
மேலும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் வகையில்தான் நாங்கள்நான்காவது முறையாக சண்டைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம். அமைதி ஏற்படுத்துவதுதான் எங்கள் குறிக்கோள்என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் வெகு விரைவில் புலிகள் தலைவர் பிரபாகரனைசந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான இறுதித்திட்டம் குறித்து கேட்பார் என்றும் அந்தப்பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications