டான்சி வழக்கு: ஜெ. மனு மீது ஏப்ரல் 9 ல் விசாரணை
சென்னை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் தனக்குக் கிடைத்த 3 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்யுமாறு மேல்முறையீடு செய்த ஜெயலலிதாவின் மனு குறித்து ஏப்ரல் 9 ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம், டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குஅளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 9 ம்தேதி நடக்கும் என்று கூறினார்.
முன்னதாக, திங்கள்கிழமை ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், வருகின்ற சட்டபேரவை தேர்தலில் போட்டியிடஇருப்பதால், டான்சி வழக்கில் எனக்கு தண்டனை அளிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கோரியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில்போட்டியிட முடியாது.
இதுவரை 4 வழக்குகளில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. டான்சி நிலபேர ஊழல்வழக்கை தவிர மற்ற வழக்குகளில் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
டான்சி வழக்கில் மட்டும் இருவேறு குற்றங்களுக்காக 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையைஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் தண்டணையை ரத்து செய்யக்கோருகிறார் ஜெயலலிதா.
தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ஜெயலலிதா எந்தப் பிரச்சனையும் இன்றி தேர்தலில் போட்டியிட முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications