ஆயுதப்பேர ஊழல் குறித்து ரகசிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தெஹல்கா டாட் காம் இணையதளம் அம்பலப்படுத்திய ஆயுதப்பேர ஊழல் வழக்கு குறித்து ரகசிய விசாரணைநடத்தப்போவதாக, இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடசாமி வியாழக்கிழமைகூறினார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆயுதப் பேர ஊழல் குறித்து நாங்கள் ரகசிய விசாரணை நடத்தத் தீர்மானித்துள்ளோம். இதுகுறித்துவெளிப்படையான விசாரணையும் நடத்தப்படும்.

ஆயுதப் பேர ஊழல் வழக்கு தொடர்பாக யார் யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது குறித்தும்அடுத்த வாரத்திற்குள் முடிவு செய்யப்படும்.

இந்த ஊழல் குறித்து ஆரம்பகட்ட தகவல்கள், சாட்சியங்கள் போன்றவற்றைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.இந்தத் தகவல்களைத் திரட்ட 10 முதல் 12 நாட்கள் ஆகலாம். தகவல்கள் அனைத்தையும் சேகரித்தபின் இந்த மாதஇறுதிக்குள் விசாரணை ஆரம்பமாகும்.

நாங்கள், பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லிஆகியோருக்கு ஆயுதப் பேர ஊழல் குறித்து விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவுள்ளோம் என்றார்.

வெங்கட்சாமி சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி. இவர் கடந்த மார்ச் மாதம் ஆயுதப் பேர ஊழலை விசாரிப்பதற்காகநியமிக்கப்பட்டார். இவர் அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஆயுதப் பேர ஊழல் குறித்து விசாரித்து அறிக்கைசமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கூறியுள்ளபடி சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடசாமிநியமிக்கப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+