திமுக, மதிமுக பிரச்சனையில் தலையிட மாட்டேன்: பெர்னான்டஸ் அறிவிப்பு
சென்னை:
தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகளிடையே சமரசத்தை ஏற்படுத்துவது என் வேலையல்ல என தே.ஜ.கூட்டணி நிறுவனரும்,முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னைக்கு வியாழக்கிழமை காலை வந்தார். அவர் நேராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் இருவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து எந்த விவரமும் தெரிய வரவில்லை.
பெங்களூரில் நடைபெற இருக்கும் தே.ஜ. கூட்டணியின் பேரணியில் பங்கு கொள்வதற்காக வைகோவுடன்பெங்களூருக்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பெர்னான்டஸ் கூறியதாவது:
தி.மு.க- ம.தி.மு.கவிடையே சமரசம் செய்வது என் வேலையல்ல அந்த எண்ணத்துடனும் நான் இங்கு வரவில்லை.ம.தி.மு.க. மத்தியில் உள்ள தே.ஜ.கூட்டணியில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து பிரதமர் முடிவுசெய்வார்.
நான் வியாழக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதியை பார்க்க வில்லை. தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் என் நெடுங்கால நண்பர்.
அந்த முறையில்தான் அவர் என்னை பார்க்க வந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது,ராஜ்குமாரை விடுவிக்க உதவுமாறு நான் நெடுமாறனை கேட்டுக் கொண்டேன். அப்போது என் கோரிக்க்ைகுஇணங்கி அவரும் சிறப்பாக செயல்பட்டார் என்றார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications