பாண்டிச்சேரியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள்: ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தமாகா கட்சிகளுக்கு 9 தொகுதிகள் மட்டும்தான்ஒதுக்கப்பட்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்தத் தொகுதிகளை ஏற்றுக்கொள்வது குறித்து காங்கிரஸ் சனிக்கிழமை முடிவை அறிவிக்க வேண்டும் என்றும்அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தமாகா, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதே கூட்டணி புதுவையில் ஏற்பவடுதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமதாஸ் புதுவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பாண்டிச்சேரியில் இதுவரை அதிமுக, பாமக இடையேதான் கூட்டணி ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் இன்னும் காங்கிரஸ் இடம்பெறவில்லை. எதிரணியினர் தொகுதிப்பங்கீட்டை முடித்துக்கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் எங்கள் கூட்டணியில் முடிவுகாணாமல் இருப்பது ஓரளவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுசம்பந்தமாக நான் ஜெயலலிதாவிடம் நேரிலோ,போனிலோ பேசி காங்கிரஸ் கட்சிக்கு காலக்கெடு விதிக்கச் சொல்வேன்.
பாண்டிச்சேரியில் கூட்டணி குறித்து காங்கிரஸ் 2 நாட்களில் முடிவு அறிவிக்க வேண்டும். 2 நாட்களில் பேசி முடிக்கவேண்டிய விஷயத்தை இழுத்தடிப்பது காங்கிரஸ் தலைவர் நாராயணசாமிதான்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைப்படி பாமக 10 தொகுதிகளிலும், அதிமுக 11 தொகுதிகளிலும், மீதமுள்ள 9இடங்களில் காங்கிரஸ், தமாகா போட்டியிட வேண்டும். இதை ஏற்றுக் கொண்டால்தான் அவர்களுடன் கூட்டணி.சனிக்கிழமை வரை பார்ப்போம். இல்லாவிட்டால் தேர்தல் பணிகளில் இறங்கி விடுவோம் என்றார் ராமதாஸ்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications