திமுக, மதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடாது: வெங்கைய்யா நாயுடு
சென்னை:
தி.மு.க., ம.தி.மு.க இரண்டுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதும், அவர்கள் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்இணைந்து போட்டியிட இயலாத சூழ்நிலை உருவாகியிருப்பதும் வருந்தத்தக்கது என மூத்த பா.ஜ.க. தவைவரும்,மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தான் தே.ஜ. கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ளது. எனவேதி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், ம.தி.மு.க. தலைவர் வைகோவும் தான் அவர்களுக்குஇடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடாது. நாடாளுமன்றத்தேர்தல் என்றால்தே.ஜ. கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமை ஏற்கும். அப்போது இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் பா.ஜ.க. சமரசமுயற்சியில் ஈடுபடும்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் தி.மு.க, - ம.தி.மு.க.வுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறாரா என்பதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மட்டுமேபா.ஜ.க.பிரசாரம் செய்யும்.
கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறுகின்றன. முன்னர்இது போல் வந்த கருத்துக் கணிப்புகள் தவறாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications