திமுக-மதிமுக மீண்டும் சேர வாஜ்பாய் முயற்சி: கருணாநிதிக்குத் தெரியாது
சென்னை:
மதிமுகவை மீண்டும் திமுக கூட்டணிக்குள் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுவதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், மதிமுகவுடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்குக் கொண்டு வருவது குறித்து வாஜ்பாய் என்னிடம் ஏதும் பேசவில்லை. அப்படியேமதிமுக-திமுக உடன்பாடு ஏற்பட்டாலும் எந்தப் பலனும் ஏற்படாது.
அதே போல முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ்பெர்ணான்டசை வைகோ சந்தித்துப் பேசியது குறித்தும் பத்திரிக்கைகள் தான் ஏதேதோ எழுதுகின்றன. வைகோவுக்காகபெர்ணான்டஸ் என்னிடம் ஏதும் பேசவில்லை.
வைகோ உபயோகித்த கடுமையான வார்த்தைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், மதிமுகவுடன் மீண்டும் கூட்டணிஎன்ற நிலையே சாத்தியமில்லை. திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் மதிமுக ஈடுபட்டது. திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகவெறும் சீட் பிரச்சனை மட்டும் காரணமில்லை. அவர்கள் பேசிய கடுமையான வார்த்தைகளைப் பார்த்தால், (கடுமையானவார்த்தைகள் எதையும் தான் உபயோகிக்கவில்லை என வைகோ தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது). வேறு ஏதோகாரணத்தினாலும் விலகிவிட முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
கம்பம், சங்கரன்கோயில், திருமங்கலம் ஆகிய 3 சீட்களை மதிமுக கேட்டது. அதை நாங்கள் தரவில்லை என்பதால் பிரச்சனையைமதிமுக பெரிதாக்கியது.
அதிமுகவில் பாருங்கள். கடந்த முறை த.மா.கா. வென்ற 21 இடங்களை அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. அதை பொறுத்துக்கொண்டுள்ள த.மா.காவின் அரசியல் கலாச்சாரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
எங்கள் கூட்டணியில் கம்பம் தொகுதியை பா.ஜ.க கேட்டது. அதனால் தான் அதைத் தர முடியாது என வைகோவிடம்சொன்னேன். சங்கரன்கோயில் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்குத் தந்துவிட்டதால் அதையும் தர இயலாது என்றேன்.
(தான் பிறந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமம், சங்கரன்கோயில் தொகுதியில் வருவதால் அதைத் தருமாறு வைகோகருணாநிதியிடம் கேட்டார். அங்கு அவர் போட்டியிடவும் முடிவு செய்திருந்தார். ஆனால், அதை புதிய தமிழகத்துக்கு ஒதுக்கியதுதிமுக)
கோவில்பட்டி தொகுதியைத் தரத் தயார் என்றேன். அவரது சொந்த ஊர் இந்தத் தொகுதியின் கீழும் வருகிறது. அதே போலதிருமங்கலம் தொகுதியைக் கேட்டார்கள். அதற்குப் பதிலாக தஞ்சாவூர் தொகுதியைக் கேட்டிருக்கலாம் என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications