மீண்டும் ஆட்சியமைக்க கட்டளையிடுங்கள்: பிரசாரத்தை துவக்கினார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க கட்டளையிடுங்கள் என்று திருச்சிதேர்தல் பிரசார தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி .

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்க விழாவும், திமுக மாநாடும் திருச்சி விமான நிலையம்அருகேயுள்ள திடலில் திங்கள்கிழமை நடந்தது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

பாஜக சார்பில் உரையாற்றிய பொன் ராதா கிருஷ்ணன் கூறுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள்தோழமை கட்சிகள் அனைவருக்கும் பிரசாரம் செய்வோம். அவர்களுக்காக உங்களிடம் வாக்கு கேட்போம்என்றார்.

அவர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக மட்டும் வாக்கு கேட்காமல் தோழமை கட்சிகளுக்காக வாக்குகேட்டுள்ளது மகிழ்ச்சியடைய வைக்கிறது. இது பாஜகவினரின் சுயநலமில்லாத தன்மையைக் காட்டுகிறது.

வேட்பாளர் பட்டியல்:

முதலில் தொகுதி பங்கீடு முடிந்தபின்தான் தேர்தல் அறிக்கை வெளியாகும். அதற்குப் பிறகு வேட்பாளர் பட்டியல்அறிவிக்கப்படும்.

திமுக மாநாட்டிலும், தேர்தல் பிரசார தொடக்க விழாவிலும் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்நன்றி. இங்கு வந்திருக்கும் அனைவரும் ஒரு துளி சோர்வு கூட இல்லாமல் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதுதான்எங்கள் எண்ணம்.

தேர்தல் பிரசார தொடக்கவிழாவில் வேட்பாளர் பட்டியல் அறிவித்தால், தங்கள் பெயர் இல்லாத வேட்பாளர்கள்சோர்வடைந்து செல்வார்கள். தங்கள் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன்செல்வார்கள்.

தேர்தல் பிரசாரம் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இப்போதுவேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

வேட்பாளர் பட்டியல் தயாராகவில்லை என்று நினைக்க வேண்டாம். 3 நாட்களுக்கு முன்பே வேட்பாளர் பட்டியல்தயாராகி விட்டது. 14 ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

5,000 பேர் விண்ணப்பம்:

வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 5,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 12 நாட்களாக அவர்களுக்கு நேர்காணல் நடத்தி, அவர்களது விருப்பம், கல்வித்தகுதி, குறிக்கோள், வெற்றிவாய்ப்பு ஆகியவற்றை அறிந்து 174 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்று திருநாவுக்கரசு கூறி வருகிறார். கடுமையான தேர்தல்போராட்டத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாலும் 174 தொகுதிகளில் திமுக போட்டியிட நினைத்து, பிறதொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குக் கொடுத்துள்ளோம்.

கொடுக்க நாம் என்ன மேல், வாங்க அவர்கள் என்ன கீழ்? எல்லாருமே ஒன்றுதான். தொகுதிகளைக்கொடுத்திருக்கிறோம் என்பதை விட பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே சரி.

டாக்டர் கிருஷ்ணசாமி, திருமாவளவன் ஆகியோர் பேசியதை பார்க்க 77 வயது வரை நான் உயிரோடு இருப்பதைநினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+