ஜெயலலிதா வழக்கில் குழப்பம் ஏன்?
சென்னை:
டான்சி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டைன விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வரும் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளதன் மூலம் ஜெயலலிதாவும் மிகப் பெரிய அரசியல்அடி விழுந்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
நேற்று தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை இருக்காது என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. இதனால் மகிழ்ச்சியில்திளைத்திருந்த அதிமுகவினரின் சந்தோஷம் 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. தீர்ப்பில் ஏகப்பட்ட குழப்பம் இருந்ததால்,நேற்றே இது தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் நீதிபதியிடம் விளக்கம் கோரினர்.
இதையடுத்து வியாழக்கிழமை தீர்ப்பில் உள்ளதாகக் கூறப்படும் குழப்பம் குறித்து விளக்கம் அளிப்பதாக நீதிபதிகூறினார்.
குழப்பம் ஏன் வந்தது?
டான்சி வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதை எதிர்த்த ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்துஜாமீனில் விடுதலை செய்தது.
ஆனால், தனக்கு ஜாமீன் வழங்கியது மட்டும் போதாது. தன்னை குற்றவாளி இல்லை எனவும் அறிவிக்க வேண்டும்.அப்போது தான் தேர்தலில் போட்டியிட பிரச்சனை இருக்காது எனக் கூறி ஜெயலலிதா மீண்டும் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்தார். (ஏனெனில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்கதடை உள்ளது.)
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய சாரம் இது தான்:
- குற்றவாளியையும், தண்டனையையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஜெயலலிதாவுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என்பதும் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தான் அர்த்தம்.
- அதே போல தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜெயலலிதாவைதடை செய்ய முடியாது என அவரது வழக்கறிஞர் வாதாடினார். இது குறித்து தேர்தல் கமிஷ்னரிடம் தான்ஜெயலலிதா விளக்க வேண்டும். தேர்தல் கமிஷ்னர் தான் இது தொடர்பாக முடிவெடுக்க முடியும்.
- கீழ் கோர்ட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் அதை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டதால்,ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாமா இல்லையா என்பதை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.
- தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதால் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு எந்தவிதமானதகுதி இழப்பும் (தடையும்) இல்லை என்றே நான் கருதுகிறேன். அவர் தேர்தலில் போட்டியிட எந்தப்பிரச்சனையும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
- ஆனால், தன்னை குற்றவாளி அல்ல எனக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடிசெய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications