அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்கலாம்: சாரங்கி
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், வேறுஏதாவது அடையாளங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி மிருதுஞ்சய் சாரங்கிதெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10 ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த முறை அனைத்துவாக்குச்சாவடியிலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கு மக்களிடம்நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் இதுவரை புகைப்பட அடையாள அட்டை கிடைக்காதவர்கள் தங்களிடம் உள்ள வேறுஅடையாளங்களைக் காட்டி வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு அமைதியாக நடப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் உதவிசெய்ய வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும்தேர்தல் அதிகாரிகள், மாவட்டக் கலெக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலையொட்டி வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்காதவண்ணம் பாதுகாக்கும் வகையில் மாநில போலீசார்தவிர 94 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 101 கம்பெனி மத்தியபுறக்காவல் படை போலீஸார், ஓய்வு பெற்ற போலீஸார், ஹோம் கார்டு போலீஸார் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவர்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்யவேண்டும். இது குறித்து நாங்கள் எதுவும் கருத்துக் கூறக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்றார்.
முன்னதாக, நிலகிரி, ஈரோடு, நாமக்கல், கோவை, சேலம், கரூர், மற்றும் திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர்களுடன்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications