தென் ஆப்பிரிக்காவில் மைதானத்தில் நெரிசலில் சிக்கி 47 பேர் பலி
ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் அளவுக்கதிகமாக கூட்டம் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி 47 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் அடங்குவர்.
ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள எலிஸ் பார்க் ஸ்டேடியத்தில் புதன்கிழமை இரவு கால்பந்தாட்டம் நடந்தது.கால்பந்தாட்டத்தைக் காண வந்திருந்த விளையாட்டு ரசிகர்கள் மைதானம் முழுவதும் கூடியிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 47 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். நெருசலில் சிக்கிஉயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த எலியஸ் பார்க் ஸ்டேடியத்தில் 60,000 இருக்கைகள் உள்ளன. இருக்கைகளில் அமர்ந்துபார்ப்பவர்களைத் தவிர ஸ்டேடியத்தின் வெளியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
கைசர் செப் மற்றும் ஓர்லான்டே பைரேட்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கிடையே கால்பந்தாட்டம் நடந்துகொண்டிருந்தது. அதைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விளையாட்டு நடந்து கொண்டிருந்தஸ்டேடியத்துக்குள் நுழைய முயன்றனர்.
கூட்டத்தைக் கலைத்து விடுவதற்காக போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்துகூட்டநெரிசலில் சிக்கி 47 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து ரெப்ரீ ஆட்டம் தொடங்கிய30 நிமிடங்களில் ஆட்டத்தை நிறுத்தினார்.
நெரிசலில் சிக்கி காலில் காயம் ஏற்பட்ட ஹரியத் ட்லாமினி கூறுகையில், நான் எனது இருக்கையில் அமர்ந்துகால்பந்தாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பெருங்கூட்டம் ஒன்று நாங்கள் அமர்ந்திருந்தஇருக்கையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது நெரிசலில் சிக்கி எனது காலில் காயம் ஏற்பட்டதுஎன்றார்.
இச்சம்பவத்தில் மொத்தம் 130 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேர் மிகவும் ஆபத்தானநிலையில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நகோன்டி பால்போர் கூறுகையில், நெரிசலில் சிக்கிஉயிரிழந்தவர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்துமாறு கூறினார். தென் ஆப்பிரிக்க அதிபர் தாபோ மபேஹிகூறுகையில் இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைை நடத்த உத்தரவிட்டார். இது போன்ற சம்பவம்எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்றும் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications