போலீசுக்கு டிமிக்கி: 4 சர்வதேச குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சினிமா பாணியில் போலீஸ் ஜீப்பிலேயே 4 சர்வதேச குற்றவாளிகள் தப்பிச்சென்றனர்.

கோவையில் நடந்த இந்த பரபரப்புச் சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் மாருதிக் காரில் இரண்டு பெண்களுடன் சென்று நகைக் கடையில்தங்கள் கைவரிசையை காட்டியது ஒரு கும்பல். இதற்கு அடுத்த நாளே இந்தக் கும்பல் உடுமலைப் பேட்டைக்குச்சென்றது.

அங்கு இரண்டு பெண்களும் நகைகளைப் பேரம் பேசி எடுத்துக் கொண்டு மாருதிக் காருக்குள் நுழைய உடனேபோலீசாருக்குத் தகவல் பறந்தது. போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தபோது துப்பாக்கியால் போலீஸ்காரரைச்சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இந்தகும்பலை போலீசார் கோவை அருகே உள்ள வடவள்ளியில் வைத்துஒரு வீட்டில் பிடித்தனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார், வித்யா, பேபி என்ற நூர்ஜகான், மற்றும் குணசேகரன் ஆகிய இவர்கள் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நான்கு பேரும் விசாரணைக்காக கோவையிலிருந்துஉடுமலைப் பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, கோவையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சி அருகே சென்றபோது, ஜீப்பில் இருந்தசர்வதேசக் கொள்ளைக் கும்பல், தப்பிச் செல்ல முடிவு செய்து தண்ணீர் வேண்டும், டீ வேண்டும் எனக்கேட்டுள்ளனர். கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தக் கூடாது என்றாலும், மனிதாபிமானஅடிப்படையில் வண்டியை நிறுத்தியுள்ளனர்.

அனைவரும் சாவகசமாக தண்ணீர் குடித்து, தாகம் தணித்துக் கொண்டிருந்தனர். ஜீப் டிவைர் கீழே இறங்கியுள்ளார்.போலீசார் கைதிகளுடன் கீழே இறங்கி தண்ணீர் வாங்கி ஜீப்பில் இருந்த கைதிகளுக்குக் கொடுத்தார். அப்போது,எஸ்.ஐ பாலசுந்தரம் ஜீப்பில் இருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது கை விலங்கின் உதவியால், எஸ். ஐயின் கழுத்தை நெறிக்க, கைதிகுணசேகரன் ஜீப்பை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றான். பின்னர் எஸ். ஐயை கீழே தள்ளி விட்டு சென்றனர்.ஜீப் கிளம்பும்போது அதனை அமுதா என்ற பெண் போலீசும் தடுக்க முயன்றபோது கீழே விழுந்து காயம்அடைந்துள்ளார்.

சிறிது தூரம் சென்றவுடன் ஜீப்பில் இருந்த கைதிகள் ஒரு திட்டம் தீட்டினர்.

முத்தையா நகர் என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது, அங்கு மாருதிக் காருக்கு வெளியே நின்று ஒருவர்சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காரைக் கிளப்பிச் சென்றனர்.காருடன் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஜெகதீசன் பறிகொடுத்தார்.

காரை எடுத்துக் கொண்ட கும்பல், கேரளாவிற்கு பறந்தது. பறிகொடுத்த போலீசார் ஆயுதங்கள்வைத்திருந்தபோதிலும், அதனைப் பயன்படுத்தவில்லை. இந்த ஜீப்பில் வந்த எஸ். ஐ. பாலசுந்தரத்திடம் பிஸ்டல்இருந்துள்ளது.

போலீசார் கருப்பண்ணன், தங்கவேலு, ஆதம்ஷா, ஜீப் டிரைவர் ஆகியோரை எஸ்.பி தாமரைக் கண்ணன்சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்தைத் தடுக்க முயன்று காயமடைந்த பெண் போலீஸ்அமுதா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+