ஜெயலலிதாவா? தொண்டர்களா? தவிக்கிறார் மூப்பனார்
சென்னை:
கடந்த தேர்தலில் த.மா.கா. வென்ற பல தொகுதிகளையும் ஜெயலலிதா பறித்துக் கொண்டதால் அக் கட்சியில் கடும்அதிருப்தி நிலவுகிறது. மேலும் 8 மாவட்டங்களில் அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட ஜெயலலிதா தரவில்லை.
இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள பல மாவட்டங்களின் கட்சித் தலைவர்களும் அதிமுகவை எதிர்த்துத்தனியே போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர். கட்சித் தலைவர் மூப்பனாரையும் அதிமுக கூட்டணியை விட்டுவிட்டுவெளியே வந்துவிடுமாறு அவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், ட்டணி உறுதியாகி, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டு, தேர்தலும் வந்துவிட்ட நிலையில் இப்போதுஎந்தவிதமான புதிய முடிவையும் எடுக்க முடியாத நிலைக்கு மூப்பனார் தள்ளப்பட்டுள்ளார்.
கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள், தொண்டர்கள் ஒரு பக்கம் கோபத்தில் இருக்க மறுபக்கம்ஜெயலலிதாவை எதிர்த்து ஏதும் பேச முடியாத நிலையில் மூப்பனார் இரு தலைக் கொல்லி எறும்பாக தவித்துவருகிறார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, ஈரோடு, அரியலூர், நாமக்கல், சேலம், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில்ஒரு தொகுதியைக் கூட த.மா.காவுக்கு ஜெயலலிதா தரவில்லை. இந்த மாவட்டங்களின் த.மா.கா. தலைவர்கள்இதை பெரும் அவமானமாகக் கருதுகின்றனர்.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எந்தவிதமான தேர்தல் பணியும்செய்வதில்லை என இம் மாவட்ட த.மா.கா. தலைவர்களும் தொண்டர்களும் முடிவெடுத்துள்ளனர்.
சில மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடக் கூட த.மா.காவினர் தயாராகிவருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் தீவிர முயற்சியில் மூப்பனார் ஈடுபட்டுள்ளார்.
இப்போது த.மா.கா. எம்.எல்.ஏக்களாக உள்ள 24 பேரின் தொகுதிகளை ஜெயலலிதா எடுத்துக் கொண்டுவிட்டார்.இவர்கள் அனைவரையும தொகுதி மாற்றி போட்டியிடச் செய்ய முடியாது. சொந்தத் தொகுதியை விட்டுவிட்டுஜெயலலிதா கொடுத்த ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் இவர்கள் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்.
இதனால், தொகுதி மாற எம்.எல்.ஏக்களே தயாராக இல்லை. இந்நிலையில் இவர்களுக்கு உள்ள ஒரே வாய்ப்புதேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான். ஆனால், கடந்த தேர்தலில் வென்ற 24 எம்.எல்.ஏக்களுக்கும் சீட்தராமல் புதியவர்களுக்கு சீட் தருவது கட்சிக்கே அவமானமாக அமையும் என்பதால் மூப்பனார் குழம்பிப் போய்தவித்து வருகிறார்.
சில தொகுதிகளை தங்களிடம் இருந்து பறித்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளது தான்த.மா.காவினரை மிகவும் கொதிப்படையச் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக, ஜெயலலிதா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்கனவே த.மா.கா.தொண்டர்கள் இறங்கிவிட்டனர். இந்த எதிர்ப்பு மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. இதை மூப்பனார் எப்படிசமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications