பஸ்சில் பயணம் செய்தால் பரிசு
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் பஸ்சில் பயணம் செய்தால் பரிசு வழங்கும் திட்டத்தை தனியார் பஸ் கம்பெனிஅறிமுகப்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் என்ற தனியார் பஸ் நிறுவனம் இந்த பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.தினம் பொள்ளாச்சியிலிருந்து மலையாண்டிபட்டணத்திற்குச் செல்லும் இந்த பஸ்சில் இப்போது கூட்டம் நிரம்பிவழிகிறது.
தினம் இந்த பஸ்சில் பயணம் செய்வோருக்கு டிக்கெட்டுடன் ஒரு பரிசுக் கூப்பனும் வழங்கப்படுகிறது. இதனைப்பெற்றுக் கொண்டு பயணம் செய்த பின்னர் அன்று மாலை பரிசுக் குலுக்கல் நடக்கிறது. இந்தக் குலுக்கலில் பரிசுபெற்றோரின் விபரம் அடுத்த நாள் பஸ்சில் ஒட்டப்படுகிறது. பரிசினை அவர்கள் தனியார் பஸ் நிறுவனஅலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இதே போல மாதம் முழுவதும் இதே பஸ்சில் பயணம் செய்வோருக்கு சிறப்பு குலுக்கல் மாத இறுதியில்நடத்தப்படுகிறது. இதில் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாகக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications