த.மா.கா.விலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடுகிறார் அப்பாவு

Subscribe to Oneindia Tamil

ராதாபுரம்:

ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகினார். ராதாபுரத்தில் சுயேட்சையாகபோட்டியிடப் போவதாக தனது ஆதரவாளர்களிடம் அறிவித்தார்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் த.மா.காவுக்கும், காங்கிரசுக்கும் 47 தொகுதிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் த.மா.கா. 32 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் கடந்த தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டு வெற்றி பெற்ற 21 தொகுதிகளை ஜெயலலிதா பறித்துக்கொண்டு அவற்றில் அ.தி.மு.க. போட்டியிடும் என அறிவித்தார். த.மா.கா வெற்றி பெற்ற 3 தொகுதிகளை பறித்துபா.ம.கவுக்கு ஒதுக்கினார்.

இதனால் த.மா.கா.வினர் அதிர்ச்சியடைந்தனர். ராதாபுரம் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அங்குபோட்டியிட்டு வென்ற அப்பாவுவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராதாபுரத்தில் அப்பாவு ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அவர்கள் அப்பாவு ராதாபுரத்தில் சுயேட்சையாகபோட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதன்பின் ஆதரவாளர்களிடம் பேசுகையில் அப்பாவு கூறியாதவது:

நான் கடந்த ஆண்டுகளில் இந்த தொகுதிக்கு பல நல்ல பணிகள் செய்திருக்கிறேன். நான் சிறப்பாகபணியாற்றியதற்கு நீங்கள்தான் காரணம்.

த.மா.கா. தலைமை எனக்கு துரோகம் செய்து விட்டது. உங்கள் ஆதரவு இருந்தால் நான் சுயேட்சையாகபோட்டியிடுவேன். சுவர்களில் எல்லாம் என் பெயரை எழுதுங்கள். எந்த சின்னம் ஒதுக்கப்படும் எனதெரியவில்லை. எந்த சின்னம் ஒதுக்கப்பட்டாலும் சரியாக வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+