சமத்துவபுரம் வேண்டுமா? சசிகலாபுரம் வேண்டுமா?
சென்னை:
ஜீன்ஸ் பட பாடல் பாணியில் வித்தியாசமான பாடலைப் பாடி நடிகர் நெப்போலியன் சென்னையில் தேர்தல்பிரசாரம் செய்தார்.
நடிகர் நெப்போலியன் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்குஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் புதன்கிழமை மாலை வில்லிவாக்கம்தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நெப்போலியன் குறைவாகப் பேசினார், ஒரு பாட்டும் பாடி பிரசாரம் செய்தார்.
அதிசயங்களே வியந்து போகும் அதிசயம் எங்கள் கலைஞர் கருணாநிதி. குறைவில்லாமல் ஆட்சி நடத்துவதுஅதிசயம்தானே? என்று கூறிய நெப்போலியன் பிறகு பாட்டுக்கு மாறினார்.
நெப்போலியன் பாடிய பாட்டுகள்:
ஜீன்ஸ் ஸ்டைல் ... வைகோ தோன்றி
ஜெயலலிதா தோன்றி
சசிகலா தோன்றும் முன்
உண்டான கலைஞர் அதிசயம்
77 வயதிலும் எல்லோருக்கும்
மாபெரும் கலைஞர்
அதிசயங்களே அசந்து போகும் அதிசயம்
சீவலப்பேரி பாண்டி ஸ்டைல் ... கிழக்கு சிவக்கையிலே
சூரியன் உதிக்கையிலே
கலைஞர் ஆட்சியிலே
நான் பழசை நினைக்கியிலே
பகலாய் விடிந்து விட்டது.
உங்களுக்கு கலைஞரின்
சமத்துவபுரம் வேண்டுமா?
ஜெயலலிதாவின் சசிகலாபுரம் வேண்டுமா?
கலைஞரின் உழவர் சந்தை வேண்டுமா?
ஜெயலலிதாவின் ஊழல் சந்தை வேண்டுமா?
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் வேண்டுமா?
அம்மாவின் அடாவடித் திட்டம் வேண்டுமா?
சிங்காரச் சென்னையை உருவாக்கும்
தளபதி ஸ்டாலின் வேண்டுமா?
சிங்கப்பூர் பிரஜை தினகரன் வேண்டுமா?
திமுக வேண்டுமா?
அதிமுக வேண்டுமா?
77 வயதான கலைஞர் வேண்டுமா?
53 வயதான செல்வி ஜெயலலிதா வேண்டுமா? என்ற ரீதியில் பாடி வாக்காளர்களை அசத்தினார் நெப்போலியன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications