ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத்தடை ?
சென்னை:
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னைஉயர்நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1977 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம், குற்றவாளிகள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது.இரண்டாண்டு காலத்துக்கு மேல் ஒரு கிரிமினல் வழக்கில் அதிலும் குறிப்பாக ஊழல் வழக்கில் தண்டனை பெற்றஒருவர் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் விதிமுறையைஉருவாக்கியது.
இதுதான் நேர்மையான, நல்ல தேர்தல் நடைபெறுவதற்கு வழிவகுக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
இதற்கிடையே, வழக்கறிஞர் விஜயன் பொதுநலன் கருதி சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்தமனுவில், ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தமிழகத்தில் வரும்சட்டசபைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுக்களை இரு தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் பெற்றுக் கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஜெயின், 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி வரையறுக்கப்பட்டதேர்தல் விதிமுறைப்படி குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்படுபவர்களும், ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்றவர்களும் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற விதிமுறையை மேற்கோள் காட்டினார். இந்தவிதிமுறைகள் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
தலைமை நீதிபதி உத்தரவுப்படி, 1977 ம் ஆண்டு தேர்தல் ஆணைய விதிமுறைகள் தமிழகம் உள்பட சட்டசபைத்தேர்தல் நடைபெறும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரி ஜெயாவிடமும், கிருஷ்ணகிரியில் தேர்தல் அதிகாரிமதிவாணனிடமும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா.
வேட்புமனுக்கள் பரிசீலனை வரும் 24 ம் தேதி நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையவிதிமுறைகள்படி, இவ்விரு தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்றுதெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications