மூலிகைச் செடிகள் உற்பத்தியில் முதலிடத்தில் இந்தியா
கோவை:
மருத்துவப்பயன்மிக்க மூலிகைச் செடியை உற்பத்தி செய்யவும், அதனை இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை உலக அளவில் ஏற்றுமதிசெய்யவும், இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியத் தலைவர் ராம்மோகன்ராவ் தெரிவித்தார்.
கோவையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த டாம்கால் நிர்வாக இயக்குநர் ராம்மோகன், நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
பக்கவிளைவுகளற்ற மருத்துவமாக இப்போது சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் மாறி வருகிறது. ஆங்கில மருத்துவமுறைகளில் உள்ள மருந்துகளில் பின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க மாற்று மருந்தாகமூலிகைகள் முக்கியத்துவம் வகிக்கின்றன.
இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மூலிகை வகைகள் இருக்கின்றன. இவை காடுகளில் பெரும்பாலும் இருப்பதால், அவற்றைஅறுவடை செய்வோர் முறையாக அதனை அறுவடை மேற்கொள்வதில்லை. செடியை வேருடன் பிடுங்கி எடுத்து விடுகின்றனர்.
மருத்துவச் செடியின் எந்த பாகம் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதனை மட்டுமே எடுப்பது தான் சரியான முறையாகும். இது குறித்தஒரு புத்தகம் வெளியிடப்படும்.
மேலும் இந்த மூலிகை செடிகளைப் பயிர் செய்யவும், அதனைப் பாதுகாக்கவும் தனிவாரியம் அமைக்க வேண்டும். ஏற்கனவேஇந்தப் பணியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலை துறையும் ஈடுபட்டுள்ளன.
மூலிகை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், சாகுபடி செய்தல், பதப்படுத்துதல், கொள்முதல், அறுவடை, ஏற்றுமதி உள்படபல்வேறு பயிற்சிகளை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications