தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு
டெல்லி:
வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலின்பேரில் தான் அந் நாட்டுஎல்லைப் பாதுகாப்புப் படையினர் (பங்களாதேஷ் ரைபிள்ஸ்) இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீதுதாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
அந் நாடு பிரதமரான ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நட்புறவுடன் இருப்பதை விரும்பாத தீவிரவாத இஸ்லாமியஅமைப்புகள் இந்த நட்புறவை சிதைப்பதற்காகவே இக் கொடும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஷேக் ஹசீனா மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் வங்கதேசரைபிள்ஸ் படையினரை தூண்டிவிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், அவர்களின் எண்ணப்படி, இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பெரும் பதிலடி தாக்குதல் நடத்தும். இதையடுத்துஇந்தியாவுக்கும் அதனுடன் நட்புறவுடன் இருக்கும் ஹசீனாவுக்கும் எதிரான பிரச்சாரத்தை வலுப்படுத்தி அவரைமீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுக்க முடியும் என இந்தத் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டன.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான் இந்தத் திட்டத்தைப் போட்டு செயல்படுத்தியிருக்கிறது என்பதும் இப்போதுதெரியவந்துள்ளது.
கார்கிலில் சிக்கிய இந்திய ராணுவத்தினரின் கண்களை நோண்டி சித்திரவதை செய்தததைப் போலவே வங்கதேசப்படைகளையும் தூண்டிவிட்டு இந்திய வீரர்களை கொடூரமாகக் கொலை செய்ய வைத்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.
இதனால், கடும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்த பிரதமர் இந்த சம்பவம் குறித்து முழு விவரத்தை தாக்கல்செய்யுமாறு எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு உடனடியாகவே கடும் பதிலடி தாக்குதல் தர இந்தியாவால் முடியும். ஆனால், இந்திய ஆதரவாளரான ஷேக்ஹசீனா வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இது இடைஞ்சலாகப் போய்விடும் என்பதால் தனது படைகளைகட்டுப்பாட்டுன் இருக்குமாறு இந்தியா உத்தரவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியப் படைகள் மீதான தாக்குதலுக்கு வங்கதேசஅரசு உத்தரவிடவில்லை. வங்கதேச ரைபிள்ஸ் படையினர் தான் தாங்களாவே இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்என்றார்.
இந்த் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் கை உள்ளது என்பது தெளிவாகிறது. இதற்கு சரியான பதிலடிதந்தால் தான் எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வங்கதேச ரைபிள்ஸ் படையினர் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்புப்த்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications