தினத்தந்தியுடன் மோதும் ஜெயலலிதா
மதுரை:
தான் சொல்லாதவற்றை சொன்னதாகவும். சொன்னவற்றை இருட்டடிப்புசெயவதாகவும் தினத்தந்தி நாளிதழ் மீது ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தினத்தந்தி நாளிதழ் 20ம் தேதி தான் கூறாத செய்தியை வெளியிட்டதாகக் கூறியுள்ளார்ஜெயலலிதா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
சில பத்திரிக்கைகள் கருணாநிதிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.இது குறித்து நான் கவலைப்படவில்லை. கருணாநிதியைப் போல் தேவையற்றபொய்யான செய்திகளை உள் நோக்கத்தோடு வெளியிடுவதுதான் எனக்குவேதனையளிக்கிறது.
20ம் தேதி தினத்தந்தி நாளிதழில், மக்கள் தீர்ப்புக்கு பின் நான் மீண்டும் நகைகளைஅணிவேன் என நான் தேர்தல் பிரசாரத்தில் கூறாத செய்தியை, கூறியதாகவெளியிட்டுள்ளது.
நான் உத்தமபாளையத்தில் பேசியது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழக முதல்வர்கருணாநிதி 5 ஆண்டு காலத்தில் என் மீது பல பொய்யான வழக்குகள் போட்டு, என்வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று விட்டார்.
ஊழல் செய்ததாக கூலி டிவி மூலம் வெளியிட்டு விளக்கியதுதான் கருணாநிதி செய்தசாதனை. நீங்கள் என்னை வெற்றியடையச் செய்தால் நான் மீண்டும் நகைகளைஅணிவேன்.
நான் ஊழல் செய்ததாக கூறி வரும் கருணாநிதி ஆயுத பேர ஊழலுக்கு துணைபோகிறார் என்று நான் பேசாதவற்றை,பேசியதாக தினத்தந்தி நாளிதழ் பொய்யானசெய்தியை வெளியிடுள்ளது.
கருணாநிதியின் விருப்பப்படி அவர் எழுதிக் கொடுத்ததை வெளியிட்டு பத்திரிக்கைதர்மத்தை குழி தோண்டி புதைத்து, மஞ்சள் பத்திரிக்கை நிலக்ைகு தரம் தாழ்ந்து விட்டதுதினத்தந்தி. இது வேதனையானது.
இதுவரை நான் கூறிய செய்திகளை இருட்டிப்பு செய்தார்கள். இப்போது நான்பேசாதவற்றை பேசியதாக வெளியிடுகிறார்கள்.
நகைகள் குறித்த என் நிலையை நான் 1997ம் ஆண்டே கூறிவிட்டேன். நகைகளைநீதிமன்றம் மூலம் மீட்டு அதை விற்று ஏழை, எளிய மக்களுக்கு தான தர்மம் செய்வேன்என நான் கூறியதில் எந்த மாற்றமும் கிடையாது.
தேர்தல் நேரத்தில் எனக்கும் கழகத்துக்கும் அவப்பெயர் ஏற்படும்படியான செய்திவெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனதெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications