அசாமில் சகஜ நிலை: மேகாலயாவில் தொடர்ந்து பதட்டம்
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடந்த அசாம் மாநில எல்லைப் பகுதியான மன்காசரில் சகஜநிலை திரும்பி வருகிறது.
அங்கு கடந்த 48 மணி நேரமாக தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை.
இருப்பினும் வங்கதேச ரைபிள் படையினர் தாக்குதல் நடத்திய இன்னொரு எல்லைப்பகுதியான மேகாலயாமாநிலம் தாவகியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
அங்கு தொடர்ந்து வங்கதேச ரைபிள் படை வீரர்களுக்கும், இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையேதுப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி அமைதிக்கூட்டம் நடத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications