சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்போம்: பொங்கலூர் பழனிச்சாமி
சிங்காநல்லூர் (கோவை):
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி மூடிய மில்களைத் திறப்பது சாத்தியமில்லை என அமைச்சர்பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மாநில விளையாட்டு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்த பிறகு திமுகஅலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிறர் மனம் புண்படும் படி பேசி ஓட்டுக்களைக் கவர வேண்டாம். நம் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளைஎடுத்துச் சொல்லுங்கள். இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டுமா? அல்லது ஊழல் ஆட்சி வேண்டுமா எனபொதுமக்களிடம் கேளுங்கள் என கருணாநிதி ஆணையிட்டுள்ளார். எனவே, அவரவர் தொகுதியில் செய்தசாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்டு வருகிறோம்.
கடந்த தேர்தலில் மூடிய மில்களைத் திறப்போம் என வாக்குறுதி அளித்தது உண்மை தான். எனது தொகுதியில்நான்கு மில்கள்மூடப்பட்டுள்ளது. இந்த மில்கள் அனைத்தும் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளுக்கு முன்புமூடப்பட்டவை.
இவற்றில் உள்ள இயந்திரங்கள் தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் பயனற்றுப் போய் விட்டன. இந்தமில்களைத் திறப்பதற்குப் பதிலாக எனது தொகுதியில் புதிதாக இரண்டு மில்களை திறந்துள்ளேன்.
மூடப்பட்ட இரண்டு மில்கள் குடும்பச் சிக்கல் காரணமாக வழக்கில் உள்ளது. எனவே, அதனை மீண்டும்இயக்குவது சாத்தியமில்லை என்பதை ஆட்சிக்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டோம் என்றார் அமைச்சர்.மேலும், அவர் தொகுதியில் செய்துள்ள நலத் திட்டப்பணிகள் குறித்து விவரித்தார்.
கோவை மேற்குத் தொகுதியில் போட்டியிடும் சி.டி தண்டபாணியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அமைச்சர் பழனிச்சாமியும், எம்.எல்.ஏ.சி.டி தண்டபாணியும் சில நாட்களுக்கு முன்பு செருப்பால் அடித்துக்கொண்டனர். இப்போது தேர்தலில் ஒன்று பட்டு கோஷ்டிப் பூசலை மறந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications