கருணாநிதி, ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல்
சென்னை:
சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல்செய்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய திங்கள்கிழமைதான் கடைசி நாள்.எனவே தமிழகம் முழுவதிலும் முக்கிய வேட்பாளர்கள் திங்கள்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியிலிருந்து போட்டியிடும் முதல்வர் கருணாநிதியும் திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சேப்பாக்கம் பகுதியில் உள்ள எழிலகம் வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் அதிகாரிஅலுவலகத்தில் முதல்வர் கருணாநிதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தேர்தல் அதிகாரியும், நல மாற்றப் பிரிவு அதிகாரியுமான லட்சுமணனிடம் கருணாநிதி தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்ட பல திமுகவினர் உடனிருந்தனர்.
இதேபோல, ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் முதல்வரின் மகன் மு.க.ஸ்டாலினும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.


Click it and Unblock the Notifications
