வன்முறையைத் தூண்ட ஜெ. சதி: தி.மு.க.குற்றச்சாட்டு
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்புமனு பற்றிய முடிவு தெரிய வரும் போது வன்முறையை கிளப்ப ஜெயலலிதா சதித் திட்டம்தீட்டியிருப்பதாக தி.மு.க.புகார் கூறியுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டிதொகுதியிலும்,கிருஷ்ணகிரி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் அவரது வேட்புமனுஏற்றுக்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்படுமா என்பது குறித்த முடிவு 24ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் வன்முறையை தூண்ட அ.தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது எனபுகார் கூறி தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலனுக்கு தி.மு.க பொருளாளர் ஆற்காடு வீராசாமி கடிதம்அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா வேட்பு மனு மீதான முடிவு 24ம் தேதி தெரிய வரும். அது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ளஅறிக்கையில் தி.மு.க. கலவரத்தில் ஈடுபடப்போவதாக பொய்யை கூறி, தன் கட்சியினரை வன்முறையில்ஈடுபடுமாறு மறைமுகமாக தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு முறைகேடாகஅனுமதி வழங்கப்பட்ட வழக்கில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட போது தமிழகம் முழுவதும்அ.தி.மு.கவினர் வன்மு றையில் ஈடுபட்டனர்.
கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
அதே போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்த அ.தி.மு.கவினர் ஈடுபட வேண்டும்என்பதற்காகத்தான் ஜெயலலிதா இது போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடாமல், நல்ல முறையில் பாதுகாக்க உரிய நடவடிக்கையை காவல் துறை எடுக்கவேண்டும். மேலும் மக்களுக்கும் எந்த விதமான பாதகமும் ஏற்படாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications