இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி 77 சதவீதம் அதிகரிப்பு
பெங்களூர்:
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுளள தளர்ச்சியையும் மீறி இந்தியாவின் சாப்ட்வேர்ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 77 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.64 பில்லியனைக் காட்டிலும் அதிகமாக ரூ.74.75 பில்லியனுக்கு சாப்ட்வேர்ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்குக்கும்அதிகமாக சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் பெருமையை கர்நாடக மாநிலம் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பெருமை ஆந்திராவிடம் இருந்தது,
பெங்களூரில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (எஸ்.டி.பி.ஐ.)இயக்குநர் பி.வி. நாயுடுஅளித்துள்ள அறிக்கையின்படி மென்பொருள் ஏற்றுமதியின் இந்திய அளவில் 62 சதவிகிதம் அதிகரித்துள்ளது.ஆனால், பெங்களூர் மட்டும் 73 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது.
பெங்களூர் மென்பொருள் பூங்காவின் வருமானமும் 44 சதவிகிதம் வளர்ந்து, நாட்டிலுள்ள 18 மென்பொருள்பூங்காக்களிலேயே அதிக அளவாக ரூ. 395 மில்லியனைத் தொட்டுள்ளது.
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறைந்துகொண்டே வரும்தற்போதைய சூழ்நிலையிலும் கடந்த 15 நாட்களில் மட்டும் ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் (மொத்தம் 928)எஸ்.டி.பி.ஐயில் அங்கத்தினர்களாகி உள்ளன.
மேலும் 6 நிறுவனங்கள் இதில் இடம் பெற காத்துள்ளன.
இன்போஸிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி, டிஜிடல் எக்யூப்மென்ட் இந்தியா, ஐ-ஃப்லெக்ஸ், எம்பசிஸ்,பி,எஃப்,எல், லூசென்ட் டெக்னாலஜிஸ், ஹீவ்லெட் பேக்கார்டு இந்தியா, ஐபிஎம் குளோபல் சர்வீசஸ் மற்றும்பிலிப்ஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன.












Click it and Unblock the Notifications