வால்பாறையில் அதிருப்தி தமாகா வேட்பாளர் போட்டி
Subscribe to Oneindia Tamil
கோவை:
வால்பாறையில் தமிழ் மாநில காங்கிரசின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ்வட்டாரத் தலைவர் கருப்பையா போட்டியிடுகிறார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த வால்பாறைத் தொகுதியில் புதிய தமிழகத்தின் தலைவர்கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி யில் தமாகா வேட்பாளர் கோவைத் தங்கம்போட்டியிடுகிறார்.
இதற்கு முன்பு வால்பாறை வட்டார தமாகா தலைவர் கருப்பையாவிற்கு சீட் கொடுக்க மூப்பனார் உறுதியளித்ததாகத்தெரிகிறது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெளியான வேட்பாளர் பட்டியலில் கோவை தங்கத்தின் பெயர் வால்பாறைத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த கருப்பையா, அந்தப் பகுதியில் உள்ள என்.எல். ஓதொழிற்சங்கத்தின் ஆதரவுடன் தனித்து சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications