ஆதரவு யாருக்கு?: 2 நாட்களில் ரஜினி அறிவிக்கிறார்
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ரஜனி எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை இரண்டுநாட்களில் அறிவிப்பார் என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சத்தியநாராயணா கூறியுள்ளார்.
1996 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் தி.மு.க அணியை ஆதரித்தார். அப்போதுதி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினிகாந்த்.ஆனால் எதிர்பார்த்தபஐ தி.மு.க.அணி அமோக வெற்றி பெறவில்லை.
1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை ரஜினிகாந்த்.
இந்நிலையில் அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் யாருக்குஆதரவு என்பதை ரஜினிகாந்த் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்து இறந்துபோன சதாசிவம் என்பவர் குடும்பத்துக்கு நிதி திரட்டும்விழா திருவொற்றியூரில் நடைபெற்றது.
ரஜினிரசிகர்கள் அளித்த நிதியை இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்தியநாராயணா பெற்றுக் கொண்டார்.
அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த பேட்டியளித்த அவர் கூறுகையில், பொள்ளாச்சியில் ரஜினிகாந்த்ரசிகர்கள் ம.தி.மு.கவில் இணைந்திருப்பதாக கண்ணப்பன் கூறியிருப்பது தவறு.
இது தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் செய்யும் ஸ்ட்ண்டுதான்.
ரஜினிகாந்தை பிரசாரத்துக்கு அழைக்கவிருப்பதாக பா.ஜ.க.கூறி வருகிறது இது பற்றி எங்களுக்கு எந்த விதமானதகவலும் வரவில்லை.
எந்த கட்சியும் ஆதரவு கேட்கவில்லை. கேட்டால் ஆதரவு அளிப்பது குறித்து ரஜினிகாந்த் முடிவு செய்வார்.
தற்போது ரஜினிகாந்த் பெங்களூரில் இருக்கிறார். அவர் இரண்டு நாட்களில் பெங்களூரிலிருந்து திரும்பிய பின்யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை அறிவிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications