சேலத்தில் உதயமானது வீரவன்னியர் பேரவை
சேலம்:
சேலத்தில் 12 வன்னியர் அமைப்புகள் இணைந்து "வீர வன்னியர் பேரவை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
இந்த அமைப்பில், பாட்டளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து துவங்கப்பட்ட வன்னியர் விடுதலைச் சங்கமும்இணைந்துள்ளது.
சேலத்தில் 12 வன்னியர்கள் அமைப்பைக் கொண்ட வீர வன்னியர் பேரவை துவங்கப்பட்டுள்ளது. இந்தபேரவையின் தலைவராக எம்.ஜி.ஆர்.கழத்தின் ஜெகத்ரட்சகன் பொறுப்பேற்றுள்ளார். இப்பேரவை குறித்துஜெகத்ரட்சகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீர வன்னியர் பேரவையில்இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். முழுக்க முழுக்க சமுதாயநலனையே குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்புத் துவங்கப்பட்டுள்ளது. எங்களின் சமுதாய நலனுக்கேஇந்த இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.
கடந்த 117 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் துவங்கி நடத்திய இயக்கம் தான் வன்னியர் சங்கம். இந்த சங்கத்தின்முக்கிய நோக்கம் நிறைவேறாமல் போனது. இதனை வழிநடத்தியவர்கள் சமுதாயத்தின் நலனில் அக்கறைகாட்டவில்லை. தமிழகத்தில் 2. 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்களின் நலனைக் காக்கவும், கல்விக்காகவும்,இந்த இயக்கம் பாடுபடும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்த அரசு, அதில் 107 சாதிகளை இடம் பெறச்செய்தது. இதனால் வன்னியர் சமுதாயத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை. வன்னிய சமுதாயத்திற்கு 20சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த இயக்கத்திற்கு எவ்வித அரசியல் பலம் இல்லை. முழுக்கமுழுக்க சமுதாய நலனில் அக்கறை செலுத்தும்.
வன்னிய சமுதாயச் சேர்ந்த அனைவரும் கல்வி கற்க வேண்டும். வீட்டிற்கு ஒருவர் தொழிலில் ஈடுபட வேண்டும்.பொறியியல், மருத்துவத் துறையில் முன்னேற வேண்டும். இதற்காக வன்னியர் சமுதாயத்திற்கென பொறியியல்கல்லூரி, மருத்துவக் கல்லூரி துவங்கப்படும். இதில் வசதியற்றவர்களுக்கும் கல்வி வாய்ப்பு ஏற்படும்.
வன்னியர் சங்கத்தை அரசியல் இயக்கமாக்கிய ராமதாஸ், இப்போது வன்னியர்களின் நலனை மறந்து விட்டார்.தனி இட ஒதுக்கீடு, ஊழலற்ற ஆட்சி அமைப்போருக்கு எங்களது ஆதரவைத் தெரிவிப்போம் என்றார்ஜெகத்ரட்சகன்.












Click it and Unblock the Notifications