ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் அறிவிப்பு
பரோடா:
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் இந்திய வீரர்களின்பட்டியல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது இறுதி பட்டியல் அடுத்தமாதம் 18ம் தேதி அறிவிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 24ம் தேதி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்திய- ஜிம்பாப்வே அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடுகின்றன. பின் 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் போட்டியிலும்விளையாடுகின்றன.
இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தேர்வு பரோடாவில்ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
தேர்வுக் குழு கூட்டத்தில் வீரர்கள் தேர்வு குறித்த விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள்பட்டியலை தேர்வு குழு தலைவர் சந்து போர்டே அறிவித்தார்.
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ஆஜய்ரத்ரா, சமீர்தீகே (விக்கெட் கீப்பர்), தீப்தாஸ்குப்தா (விக்கெட் கீப்பர்), ராகுல்டிராவிட், சச்சின்டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமண், ஹேமங் பதானி, எஸ்.எஸ் .தாஸ், என்.ரமேஷ், முகமது கயிப், வீரேந்திர ஷேவாக், தினேஷ்மோங்கியா, யுவராஜ் சிங், ஸ்ரீநாத். ஜாகீர்கான், ஹர்விந்தர் சிங், டி. மொகந்தி, அஜீத் அகர்கர், ஏ.நெக்ரா, ராகேஷ் பட்டேல், ரித்தேந்தர்சோதி. ஹர்பஜன் சிங், சரண்தீப் சிங், ராகுல் சங்வி மற்றும் எஸ் பகுதுலே.
அறிவிக்கப்பட்டுள்ள 26 வீரர்கள் கொண்ட பட்டியிலிலிருந்து ஜிம்பாப்வே செல்லும் வீரர்களின் இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும்.
தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் பயிற்சி முகாம் அடுத்தமாதம் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை பெங்களூரில் நடக்கிறது.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் விக்கெட் கீப்பர் மோங்கியாவும், சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயும் இடம்பெறவில்லை.
கும்ப்ளேக்கு தோள்பட்டை வலி காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதன் காரணமாக அவர் சமீபத்தில் இந்தியாவில் நடந்தஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications