த.மா.கா. இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது.திங்கள்கிழமை இரவு அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.
இதன்படி டாக்டர் செல்லக்குமார் வில்லிவாக்கம் தொகுதியிலும், சென்னை மாநகராட்சி தமாகா தலைவர்வெற்றிவேல் புரசைவாக்கம் தொகுதியிலும், விடியல் சேகர் ஆயிரம் விளக்குத் தொகுதியிலும், சக்ரபாணிரெட்டியார் தாம்பரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
கடலூரில் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், நன்னிலம் (தனி) தொகுதியில் செ.கு.தமிழரசன் ஆகியோர்போட்டியிடுகிறார்கள். இவர்களில் செ.கு.தமிழரசன் குடியரசுக் கட்சி வேட்பாளர். தமாகா சின்னத்தில் இவர்போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications