பாண்டி. த.மா.கா.வேட்பாளர் முதல் பட்டியல் அறிவிப்பு
சென்னை:
வரவிருக்கும் பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாதம் 10ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் த.மா.கா. 7 தொகுதிகளில்போட்டியிடுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் த.மா.காவும், காங்கிரசும் போட்டியிடுகின்றன.
ஆனால் பாண்டிச்சேரியில் த.மா.கா, வலது கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இணைந்து அ.தி.மு.க.- பா.ம.ககூட்டணிக்கு எதிராக போட்டியிடுகின்றன.
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 6 தொகுதிகளுக்கானவேட்பாளர்களை த.மா.கா தலைவர் மூப்பனார் வெளியிட்டார். இதை த.மா.கா. செய்தித் தொடர்பாளர்ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் படித்துக் காட்டினார்.
பாண்டிச்சேரியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. காசுக்கடை- வி. பாலாஜி
2. வில்லியனூர்- தேனி சி.ஜெயக்குமார்
3. பாகூர் (தனி)- கந்தசாமி
4. காரைக்கால்- வி.எம்.சி.வி. கணபதி
5. உழவர்கரை- ஏ.நமச்சிவாயம்
6. உப்பளம்- என்.நாகமுத்து
வேட்பாளர் பட்டியலை படித்தபின் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீதமுள்ள ஒரு தொகுதிக்கானவேட்பாளர் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications