பாமக வன்முறையில் ஈடுபடாது என்கிறார் ராமதாஸ்
தர்மபுரி :
சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் எனஉறுதியளிக்கிறேன் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்த்தில் ஈடுபட்டுள்ள பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியனர் வரும் சட்டசபைத் தேர்தலில் எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடமாட்டார்கள். இதற்கு உத்தரவாதம் தருகிறேன். அதே போல முதல்வர் கருணாநிதியும் உத்தரவாதம் தரத் தயாரா?
கடந்த தேர்தலில் வன்முறைக்கு காரணமாக இருந்த விடுதலைச் சிறுத்தை இயக்கத்தினர் பல இடங்களில்சுவர்களில் கத்தி, ஈட்டி, அரிவாள், வெடிகுண்டு போன்றவற்றை வரைந்து வருகின்றனர்.
இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்குஇவர்களே காரணம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 6மாதங்களாக 3 கடிதம் எழுதி விட்டேன்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது பற்றி இன்னும் தேர்தல் கமிஷனோ, நீதிமன்றமோ முடிவுஎடுக்கவில்லை. ஆனால், கருணாநிதி மட்டும் எப்படி போட்டியிட முடியாது எனக் கூறுகிறார்?. தேர்தல் மரபுகளைமதிக்கவில்லை அவர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சர் பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு நாங்கள் அதிமுக அணியில்சேர்ந்துள்ளோம். திமுகவின் மக்கள் விரோதப் போக்குதான் இதற்குக் காரணம்.
எந்த நாடாக இருந்தாலும், எந்தக் கூட்டணியாக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் 100 சதவீதம்திருப்தி இருக்காது. இதனை பேச்சுவார்தை மூலம் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும். கருத்து வேறுபாடுகளைமறந்து கூட்டணிக்குப் பாடுபடுவது தான் கூட்டணி தர்மம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications