வங்கதேச படைகள் குவிப்பு: தயார் நிலையில் இந்திய ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கெளஹாத்தி:

வங்கதேச படைகள் இந்திய -வங்கதேச எல்லையில் குவிக்கப்பட்டு வருவதால் இந்தியராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ராணுவத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

கடந்தவாரம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேச ரைபிள்ஸ் வீரர்கள்பி.எஸ்.எப். வீரர்கள் 16 பேரை பிடித்துச் சென்று கொடுமைப்படுத்தி கொடுரமானமுறையில் கொலை செய்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

தற்போதும் தொடர்ந்து எல்லைப் பகுதியில், வங்கதேச படையினர் மற்றும் ரைபிள்ஸ்படை வீரர்கள் அதிக அளவில் நடமாடி வருவதால் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து திரிபுரா, மிசோரம் மற்றும் அசாமின் எல்லை பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைவரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலுமான அரவிந்தராஜன்செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கதேச ரைபிளஸ் படை வீரர்கள் (பி.டி.ஆர்)நடமாட்டம் இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசோரம் மாநில எல்லைகளில் அதிகமாககாணப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு அவர்கள் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பில்ஈடுபட்டிருந்ததையும் காணமுடிந்தது.

பி.டி.ஆர் வீரர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதையடுத்து முக்கியமானஇடங்களில் மூத்த அதிகாரிகள் தலைமையில் காவலை பலப்படுத்தியுள்ளோம்.அனைவரையும் தயார் நிலையில் இருக்குமாறும் கூறியுள்ளோம்.

எந்த விதமான பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு அசாம், லதி தில்லா பகுதியில் இருக்கும் காச்சார் பகுதியில்வங்கதேச படைகள் இந்தியாவிற்குள் ஊடுறுவ முயன்றனர். இந்திய படையினர்அவர்கள் முயற்சியை முறியடித்தனர்.

வங்கதேச படைகள் துப்பாக்கி சூடு நடத்திவருவது கவலையளிக்கிறது எந்தசூழ்நிலையையும் சமாளிக்குமளவிற்கு தேவையான அளவு படைகள் நமது எல்லைப்பகுதியில் உள்ளன.

பி.டி.ஆர்- பி.எஸ்.எப். கமாண்டர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து எல்லைப் பகுதியில்நிலவும் பதற்றத்தை குறைப்பது பற்றி பேசவுள்ளனர் என்றார்.

இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கதேசத்தின் ராணுவ வீரர்கள்மேகாலயா. திரிபுரா பகுதியில் உள்ள எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்என்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+