தாமரைக்கனி vs
சென்னை:
தாமரைக்கனி எந்த நிலைக்கும் தாழந்து போகக்கூடியவர் என அவரது மகன்இன்பத்தமிழன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீவில்லிப்புத்தூரில் சுயேட்சையாக போட்டியிட்டுவெற்றி பெற்றவர் தாமரைக்கனி. பின்னர் அவர் அ.தி.மு.கவில் இணைந்தார்.
வரவிருக்கும் தமிழக சட்டசபைதேர்தலில் தனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியைஒதுக்குமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிலதாவை கேட்டுக் கொண்டார்தாமரைக்கனி.
ஆனால் அவருக்கு பதிலாக அவரது மகன் இன்பத்தமிழனுக்கு சீட் தருவதாகஜெயலலிதா சொன்னதால், தாமரைக்கனி அ.தி.மு.கவிலிருந்து விலகி சுயேட்சையாகபோட்டியிடப் போவதாக அறிவித்தார்.
மேலும் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் எனவும்அறிவித்திருந்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் சுயேட்சையாக நிற்கும் தாமரைக்கனியை எதிர்த்து அவரது மகன்இன்பத்தமிழனை அ.தி.மு.க. வேட்பாளராக நியமித்துள்ளார் ஜெயலலிதா.
திங்கள்கிழமை ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்பத்தமிழன் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது:
தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில்போட்டியிடப் போவதாக சொன்னார் தாமரைக்கனி.
ஆனால் அவர் கூறியபடி ஆண்டிப்பட்டியில் போட்டியிடாமல் ஸ்ரீவில்லிப்புத்தூரில்போட்டியிட முடிவு செய்தது ஏன்?
தாமரைக்கனி எந்த அளவுக்கும் தரம்தாழ்ந்து போகக் கூடியவர். தேர்தல் வாக்குகள்எண்ணப்படும் மே மாதம் 13ம் தேதி அவரது முகமூடி கிழிந்துவிடும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications