ம.தி.மு.க. வேட்பாளர் திடீர் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூர் சட்டசபைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எஸ்.குமரேசன் திடீர் மரணமடைந்தார்.
வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர்அலுவலகத்தில் குமரேசன் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது குமரேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பிற்பகலில் இறந்தார்.
கொரடாச்சேரி மதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் குமரேசன். அவருக்கு மனைவியும், 2 மகன்கள், 2மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications