இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனைசெய்யப்படுகின்றன.

தமிழக சட்டசபைக்கு வருகிற மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16ம்தேதி துவங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த மனுத்தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபைக்கு 2,841 மனுக்களும், திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் 16 பேரும்வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 3 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மனுக்கள் ஏற்கப்படுமா என்பது மாலையில் தெரிந்து விடும்.

ஜெயலலிதா மொத்தம் நான்கு தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்துள்ள தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளுக்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் வந்ததால் ஜெயலலிதாசம்பந்தப்பட்ட அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+