ப.சி. பல்டி அடித்தது ஏன்? த.மா.கா. கேள்வி
கோவை:
திமுகவை வசைபாடிய ப.சிதம்பரம், இப்போது ஆதரிப்பது ஏன் என த.மா.கா. துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்கேள்வி விடுத்துள்ளார்.
கோவையில் எஸ். ஆர். பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கடந்த 96 ம் ஆண்டு கையலாகத அரசு என திமுகவை சிதம்பரம் வர்ணித்துள்ளார். ஆனால் இப்போது மட்டும் எதையோ சாதித்துவிட்டது போல பிரச்சாரம் செய்து வருகிறார். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தான் ஜெயலலிதா மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளதாக சிதம்பரம் கூட்டங்களில் பேசி வருகிறார்.
ஆனால், வழக்குத் தொடர்ந்தது தமிழக அரசுதான். வழக்கு வெளிநாட்டு பணம் தொடர்புடையதாக இருந்ததால், மத்திய அரசின்உதவியை மாநில அரசு நாடியது. எனவே, தேவகவுடா அமைச்சரவை நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. தீர்ப்பு வெளியானால் மட்டுமே வழக்கு உண்மையானதா இல்லைபொய்யானதா என்ற உண்மை நிலவரம் தெரியும்.
அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் ரகசியமானவை என்பதை மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் அறியாதவர் அல்ல.ஆனால், அதையும் மீறி இப்படி பொதுக் கூட்டங்களில் பேசி வருவது முரண்பாடானது.
எங்களது கட்சியில் உள்ள உள்கட்சிப் பிரச்னைகளை உங்களுடன் (நிருபர்களுடன்) பேச முடியாது. யூகங்களுக்கும் பதில்சொல்லமுடியாது என்றார் பாலசுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications