யாழ்பாணத்தில் புலிகள் தாக்கி 26 ராணுவ வீரர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யாழ்பாணத்தில் நடந்த கடும் போரில் 26 இலங்கை ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கொன்றனர். மேலும்நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.

கடந்த 4 மாதங்களாக விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். ஆனால், இதை இலங்கை அரசுகண்டு கொள்ளவில்லை. புலிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தது.

இந் நிலையில் தங்களது ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பை விடுதலைப் புலிகள் நேற்றுடன் வாபஸ்பெற்றனர். இதையடுத்து புலிகள் கடும் தாக்குதல் நடத்தகக் கூடும் என்ற அச்சம் பரவியது.

இந் நிலையில் புதன்கிழமை அதிகாலை யாழ்பாணத்துக்குள் நுழைய முயன்ற இலங்கை ராணுவத்தினரைவிடுதலைப் புலிகள் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். டாங்கிகள் மற்றும் போர் விமானங்களின்தாக்குதலுடன் அவர்கள் யாழ்பாணத்திற்குள் நுழைய முயன்றனர்.

ஆனால், புலிகள் தீவிரமாக பதிலடித் தாக்குதல் நடத்தினர். இதில் 26 இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.மேலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் சணத் கருணாரத்னே கூறுகையில், விடுதலைப் புலிகள் வசமிருந்தபகுதியைக் கைப்பற்ற முயன்றபோது அவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்.

எலுத்துமடுவுல் பகுதி வழியாக யாழ்பாணத்துக்குள் ராணுவம் நுழைந்தது. பிற்பகலில் 2 கி.மீ. பரப்புள்ளபகுதியையும் கைப்பற்றியது. புதர்கள் வழியாக ராணுவத்தினர் நுழைந்தபோது புலிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பல வீரர்கள் உயிரிழந்தனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+